திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருசெந்துர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலின் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அருள்மிகு வெயிலுகந்தமன் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் நடை அதிகாலையிலையே திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும்  திருவிழாவின் கொடிபட்டமானது கோயிலில் இருந்து புறப்பட்டு ரதவீதி, மாடவீதி வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபராதணை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இருவேளைகளிலும் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 25ம் தேதி காலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்