அமர்நாத் யாத்திரை ஜூன் 23-ம் தேதி தொடக்கம்...

காஷ்மீரில் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கும் பயணம் வரும்  ஜூன் 23-ம் தேதி துவங்கும் என ஜம்மு ராஜ்பவன் தெரிவித்துள்ளது

ஜம்மு காஷ்மீரில் இமயமலை பகுதியில் அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பயண திட்டத்தை ஜம்மு காஷ்மீரின் ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

அதன்படி அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் 23-ம் தேதி தொடங்குவதாகவும், 42 நாட்கள் நடைபெறும் இந்த ஆன்மிக யாத்திரை ஆகஸ்ட் 3-ம் தேதியுடன் நிறைவடையும் எனவும் ஆளுநர் அறிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்