வெற்றி வேல்...வீர வேல்..கோலகலமாக கொண்டாடப்பட்ட தைப்பூசம்..தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளிலும்  அரோகரா என்று வின்னை பிளக்கும் அளவுக்கு கோஷங்களுடன் பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.

தமிழ்கடவுளான முருகனுக்கு உகந்த தினமான தைப்பூச திருவிழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கோலகலமாக கொண்டாடினர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் மட்டுமல்லாமல் மூலை முடுக்குகளில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தைப்பூசத்திற் பெயர் போன பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும், அழகு குத்தியும் தங்களை நேர்த்துக்கடனை செலுத்தி வந்தனர். மேலும் விழாவின் சிறப்பு நிகழ்வான தைப்பூச தேரோட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்ரனர்.

இதன் ஒரு பகுதியாக கொரோனா அச்சுறுத்தல் உள்ள மலேசியாவிலும் பக்தர்கள் கோலகலமாக தைப்பூசத்தை கொண்டாடினர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்