தைப்பூசத் திருவிழா.. வித்தியாசமான முறையில் அலங்காரம்!

தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் உள்ள தமிழக மக்கள் வசிக்கும் பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர். முருகன் ஆலயங்களில் காவடிகள் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி செல்லிப்பட்டு கிராமத்தில் உள்ள நிமிலீஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியில் இருந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தீமிதி திருவிழாவிலும் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் உள்ள சீர்செய் முருகப் பெருமானுக்கு வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பாக்கெட் உணவுகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா அழைத்து வந்தனர். பாக்கெட்டுகளில் விற்கும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்