மாசி மாதத்தில் தோன்றும் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தியன்று வருவது மகா சிவராத்திரி எனப்படுகிறது .
மாசி மாதத்தில் தோன்றும் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தியன்று வருவது மகா சிவராத்திரி எனப்படுகிறது .
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியம் கிடைத்து மோட்ஷம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
இதற்கு பின்புறத்தில் சிவனுக்கு அம்பிகையும் உண்டான ஒரு வரலாறு இருக்கிறது. அது என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்,
சிவபுராணத்தின்படி பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் உருவான அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டன. அன்றைய இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார்களாம். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, 'அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே இந்நாளை வழிபட வேண்டும் என்ன வரம் கேட்டிருக்கிறார். அதாவது அன்றைய இரவை `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டியிருக்கிறார்.
ஈஸ்வரியின் இந்த வேண்டுதலுக்கு சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்தார். இதன் அடிப்படையிலேயே `சிவராத்திரி‘ தினம் சிவபக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
சரி இந்த இரவில் நீங்கள் சிவனை எப்படி வழிபடவேண்டும் ?
சிவராத்திரி விரதம் இருந்தால் நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் உங்களை விட்டு நீங்கிப் போகும். சிவராத்திரியை குறிப்பிட்ட சிலர் தான் கொண்டாட வேண்டும் என்றெல்லாம் இல்லை.யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.அதன் பிறகு சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசிக்க வேண்டும் .
மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் முக்கியமாக கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
மனதில் எந்த தீய சிந்தனையும் ஏற்படாத வண்ணம் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும்.
இறைவனை உங்கள் சிந்தையில் ஏந்திக்கொண்டு பேராசைகளைக் கைவிட்டுவிட்டு பிறருக்கு தீமைகள் நினைக்காமல் இருந்திட வேண்டும்.
கோவிலுக்கு செல்லும்போது சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலைகளை பூஜைக்கு வழங்கலாம்.
வீட்டில் இருந்தபடி பூஜை:
சிவராத்திரியில் உங்கள் வீட்டில் இருந்தபடி நீங்கள் பூஜை செய்யும் பட்சத்தில், பூஜை அறையை சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நான்கு ஜாம பூஜைகளுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை தெரிந்து வழிபட்டால் மட்டுமே உங்களுக்கு நற்பலன் கிடைக்கும்.