கலைகட்டும் ஏகாதசி திருவிழா… திருவரங்கம் கோவிலில் பலத்தபாதுகாப்பு…

 திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த வருடம் 26.12.2019 ஆம் தேதி முதல் 05.01.2020 ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும்¸ 06.01.2020 ஆம் தேதி முதல் 16.01.2020 ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. 06.01.2020 ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படவுள்ளது. திருவிழா நாட்களில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளதால் கீழ்கண்டவாறு வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 1) பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 117 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

2) நான்கு உத்திர வீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 24 CCTV கேமராக்கள் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது.

3) திருக்கோவிலின் மூன்று கோபுர வாசல்களிலும் Speed Dome கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது.

4) ரெங்கா ரெங்கா கோபுரம் முதல் ராஜகோபுரம் வரை முக்கிய இடங்களில் 11 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

5) மாம்பழச்சாலை முதல் ராஜகோபுரம் மற்றும் ராஜகோபுரம் முதல் தேவி தியேட்டர் சந்திப்பு வரை முக்கிய இடங்களில் 45 CCTV  கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

6) அம்மாமண்டபம் உட்புறம் 10 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

7) வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் உள்ள 117 கேமராக்களும் மற்றும் கோவிலின் வெளிபுறத்தில் உள்ள 90 CCTV கேமராக்களும் கோவில் உட்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தில் இரண்டு பெரிய LED TV-க்கள் மூலமாக கண்காணிக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

8) ஸ்ரீரங்கம் காவல் நிலையம் எதிரில் உள்ள CCTV Camera Control Room-ல் கேமராக்களை கண்காணிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9) கண்டோன்மெண்ட்டில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் கோவிலுக்கு வெளிப்புறத்தில் உள்ள 90 கேமராக்களும் கண்காணிக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

10) பக்தர்களின் வசதிக்காக 21 இடங்களில் பெரிய LED/LCD டிவிக்கள் பொருத்தப்படவுள்ளது. 

11) பொதுமக்களுக்கு முக்கிய தகவல்களை பரிமாறிக்கொள்ள 73 இடங்களில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது.

12) குற்றத்தை தடுக்கவும்¸ குற்றம் நடவாமல் கண்காணிக்கவும்¸ கோவிலைச் சுற்றி முக்கிய 11 இடங்களில் ஒலிப்பெருக்கிகளுடன் கூடிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளது.

13) திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிறுத்துவதற்காக கோவிலை சுற்றியுள்ள 1) மேற்கு சித்திரை வீதி¸ 2) வடக்கு சித்திரை வீதி¸ 3) நெடுந்தெரு மந்தை¸ 4) தெப்பக்குளத்தை சுற்றிலும் நான்கு புறமும்¸ 5) மூலத்தோப்பு¸ 6) யாத்ரி நிவாஸ் எதிரில்¸ 7) அம்மா மண்டபம் அருகிலுள்ள கணேஷ் பர்னிச்சர் மார்ட் அருகில்¸ 8) ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி மைதானம்¸ 9) சிங்கபெருமாள் கோயில் எதிரில் அகிய 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்கள் சிரமமின்றி பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

14) பகல் பத்து மற்றும் இராப்பத்து திருவிழாவினை முன்னிட்டு சுவாமி தரிசனத்திற்காக நான்கு சக்கரத்தில் வரும் பக்தர்கள் அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக இடவசதியும் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் அவர்களது வாகனங்களை தனியாக நிறுத்துவதற்கு இடவசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

15) பக்தர்களின் அவசர மருத்துவ வசதிக்காக நான்கு முக்கிய வீதிகளை சுற்றிலும் 12 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளது.

16) பக்தர்களின் வசதிக்காக காவல்துறை புறக்காவல் நிலையம் அவசர கைபேசி எண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. (8940006624¸ 8940006628)   

17) பகல்பத்து மற்றும் இராப்பத்து திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களை மூலத்தோப்பு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சாமி தரிசனத்திற்கு சென்று வரவும்¸ இரண்டு சக்கர வாகனத்தில் வரும்  பக்தர்கள் மேற்கு¸ வடக்கு  மற்றும் கிழக்கு  சித்திரை வீதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு 

சாமி தரிசனத்திற்கு சென்று வரவும்¸ போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.                     

18) பகல்பத்து மற்றும் இராப்பத்து திருவிழா பாதுகாப்பிற்கும்¸ போக்குவரத்தை சீர்செய்யவும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் சட்டம் & ஒழுங்கு மற்றும் குற்றம் & போக்குவரத்து ஆகியோர்கள் தலைமையில்¸ 1 காவல் கூடுதல் ஆணையர்¸ 

6 காவல் உதவி ஆணையர்கள்¸ 18 காவல் ஆய்வாளர்கள்¸ 49 காவல் சார்பு மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள்¸ 187 காவல் ஆளினர்கள் மற்றும் ஆயுதப்படை¸ சிறப்பு காவல் படை¸ ஊர்க்காவல் படையினர் உள்பட 450 பேர் திருவரங்கத்தில் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

19) வைகுண்ட ஏகாதசி பரமபதவாசல் திறப்பு திருவிழாவின் போது பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும்¸ குற்றங்களை தடுப்பதற்காகவும்¸ போக்குவரத்தை சரிசெய்வதற்கும் மாநகரம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து சுமார் 4000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் திருக்கோவிலிலும் அதன் சுற்றுபுறங்களிலும் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படவுள்ளார்கள். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்