ஸ்ரீ நகரில் ட்ரக் மீது கல் வீச்சு... ராணுவ வாகனம் என நினைத்து தாக்கினர்...

ஸ்ரீ நகரில் ட்ரக் மீது கல் வீச்சு... ராணுவ வாகனம் என நினைத்து  தாக்கினர்...

ஜம்மு காஷ்மீரில், சிறப்பு அதிகாரம் வழக்கும் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில், அங்கு பதற்றம் நிலவுகிறது. மேலும், கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ட்ரக் மீது கற்களை வீசி தாக்கியதில் அந்த வாகனத்தின் ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில் 2 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

பிஜ்பெஹாராவின் யுரான்ஹால் பகுதியில் சென்றுகொண்டிருந்த ட்ரக் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

42 வயதான டிரைவர் நூர் முகமது தார் அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீநகரின் புறநகரிலுள்ள சவுராவில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் வாகனம் என கருதி குற்றவாளிகள் அவரது ட்ரக் மீது கற்கரை எரிந்ததாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்