தமிழகத்தை சேர்ந்த முதல் பெண் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...!

தமிழகத்தை சேர்ந்த முதல் மத்திய பெண் நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக 2வது முறையாக அமோக வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி ஏற்றுக்கொண்டது.

இதில் பாதுகாப்பு துறை அமைச்சராக ஜொலித்த தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு தற்போது நிதி அமைச்சர் அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்திரா காந்திக்கு பிறகு நிதிமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல் பெண் என்பது அவரது முதல் சாதனை. அதையும் தாண்டி தமிழகத்தை சேர்ந்த பெண் மத்திய  நிதிஅமைச்சர் என்பது இதுதான் முதல் முறை என்பது இரண்டாவது சாதனை. 

தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி அமைச்சர்களில் இவர் 6வது நிதி அமைச்சர் என்கிற பெருமையையும் பெற்றார். இவருக்கு முன்னதாக மத்திய நிதி அமைச்சர்களாக ஆர்.கே.சண்முகம் செட்டியார், டி.டி. கிருஷ்ணமாச்சாரியார், சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன், ப.சிதம்பரம் ஆகியோர் நிதி அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

மற்ற நிதி அமைச்சர்களை காட்டிலும் இவர் நிதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

 • வரவேற்கத்தக்கது
  59.49%
 • கட்சிகளுக்கு நல்லதல்ல
  29.75%
 • அதிருப்தி
  4.43%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்