தஞ்சாவூர்: முதியோர் இல்லத்துக்கு கன்றுடன் பசு தானம் - தாயின் நினைவில் நெகிழ்ந்த மகன்கள்

தஞ்சாவூர்: முதியோர் இல்லத்துக்கு கன்றுடன் பசு தானம் - தாயின் நினைவில் நெகிழ்ந்த மகன்கள்
தஞ்சாவூர்: முதியோர் இல்லத்துக்கு கன்றுடன் பசு தானம் - தாயின் நினைவில் நெகிழ்ந்த மகன்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தாயின் நினைவாக முதியோர் இல்லத்துக்கு கன்றுடன் பசு தானம் செய்து மகன்கள் நெகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் வாழை சாகுபடி விவசாயம் செய்து வரும் சகோதரர்கள் தங்களுடைய தாய் ஆசை ஆசையாக வளர்த்து வந்த பசுமாடு மற்றும் கன்று குட்டியை அவரது மறைவிற்கு பிறகு  முதியோர் இல்லத்திற்கு தானமாக வழங்கினார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த வடுகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மதியழகன் மற்றும் விஜயகுமார். சகோதரர்களாககிய இருவரும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். சகோதரர்களின்  தாயார் ஜெயலட்சுமி அம்மாள் (78). கடந்த 15 நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 

எனவே, ஜெயலட்சுமி அம்மாள் ஆசை ஆசையாக வளர்த்து வந்த பசு மற்றும் கன்றுக்குட்டியை தானமாக கொடுக்க சகோதரர்கள் இருவரும் முன் வந்தனர். அதன்படி கடுவெளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இல்லத்துக்கு பசு மற்றும் கன்றுக்குட்டியை இன்று தானமாக வழங்கினார்கள். 

ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருக்கும் முதியவர்கள் பசு மாட்டிற்கு மாலை அணிவித்து கோ பூஜை செய்து வழிபட்டு கோசாலைக்கு அழைத்து சென்றனர். அப்போது சகோதரர்கள் தங்களது தாயை நினைத்து நெகிழ்ச்சியுடன் கண்ணீர் வடித்தனர். இந்த செயல் அங்கிருந்தவர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com