ஜி பே, போன் பே மூலம் பரிவர்த்தனை : ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய நடைமுறை

ஜி பே, போன் பே மூலம் பரிவர்த்தனை : ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய நடைமுறை
ஜி பே, போன் பே மூலம் பரிவர்த்தனை : ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய நடைமுறை

கூகுள்பே, போன்பே பயன்படுத்துவது எளிது என்பதால் அதை பலரும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்

வணிக நோக்கத்திற்காக, இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகத் தொகைகளைக் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனுப்ப 1.1 சதவீத கட்டணத்தைத் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் விதித்துள்ளது.

இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமல்லாது பெரும்பாலான மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில், யு.பி.ஐ. மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்திப் பணப் பரிவர்த்தனை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உதாரணத்திற்கு, சாதாரணக் குக்கிராமங்களில் கூடக் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருப்பதும், அவர்கள் அனைவரும் இணையதளம் பயன்படுத்தி வருவதும், கூகுள் பே மற்றும் போன் பே பயன்படுத்துவது எளிது என்பதாலும், அதைப் பலரும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்

இணையத்தில் பொருட்களை வாங்குவது, சிறிய வணிகக் கடைகளில் பணப் பரிவர்த்தனை மேற்கொள் எனப் பல்வேறு பணிகளுக்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து, கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பரிவர்த்தனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால், முன்புபோல ஏ.டி.எம். சென்டரில் அதிக அளவு வாடிக்கையாளர்களைக் காணமுடியவில்லை.

இந்த நிலையில், கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணப் பரிவர்த்தனை செய்யப் புதிய விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த வகையில், கட்டணத் தொகையில், 0.15 சதவீதத்தை யு.பி.ஐ செயலி நிறுவனங்கள், பணம் செலுத்தும் வங்கிக்கு அளிக்கவேண்டும் என்றும், எரிபொருள் வாங்க 0.5 சதவீதமும், அலைபேசி, கல்வி, விவசாயம் தொடர்பாகப் பணம் செலுத்த 0.7 சதவீதமும் கட்டணம் விதிக்கப்படுகிறது என்றும், சூப்பர் மார்கெட்களில் பொருட்கள் வாங்கப் பணம் செலுத்த 0.9 சதவீதமும், மியூச்சுவல் பண்டுகள், ரயில் டிக்கெட்கள், காப்பீடு எடுக்க ஒரு சதவீதம் கட்டணம் விதிக்கப்பட உள்ளது என்று தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், வங்கிக் கணக்கிலிருந்து பி.பி.ஐ வேலட்டிற்குப் பணத்தை மாற்றக் கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com