சென்னை, ஓட்டேரியை சேர்ந்தவர் 23 வயதான சோனாலி. கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் தனது தோழி சுதாராணி என்பவரது வீட்டிற்கு தனது காதலன் மணிகண்டனுடன் சோனாலி சென்றுள்ளார். அங்கே கூடிப்பேசிக் கொண்டிருந்த அவர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது மதுப் பாட்டிலை உடைத்து, தனது கழுத்தில் சோனாலி கீறிக்கொண்டுள்ளார். மணிகண்டனிடம், ’’நீ அடிக்கடி என்னை வந்து பார்த்துவிட்டுச் செல்லவேண்டும். இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’’ எனக் கூறிக்கொண்டே நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால், கால்கள்-இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சோனாலியை சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.