கேரளாவில் ஒரு படையப்பா...கொம்பன் காட்டு யானைகளால் மக்கள் பீதி

கேரளாவில் ஒரு படையப்பா...கொம்பன் காட்டு யானைகளால் மக்கள் பீதி

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் கடந்த சில மாதங்களாகக் காட்டு யானைகளான கொம்பன் மற்றும் படையப்பாவினால் மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வீடுகளை உடைத்துச் சேதப்படுத்துவது, சாலையில் இருக்கும் பொருட்களை உடைத்துச் சேதப்படுத்துவது, சாலையில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்வது, குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது நியாய விலை கடையில் மற்றும் மளிகைக் கடைக்குள் உள்ளே சென்று பொருட்களைத் தின்பது எனக் கடந்த சில மாதங்களாகக் கொம்பன் மற்றும் படையப்பா என்னும் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த சூழலில் நேற்று நள்ளிரவு மூணாறு அருகே உள்ள சொக்க நாடு பகுதியில் புண்ணியவேல் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடைக்குள் நள்ளிரவில் புகுந்த படையப்பா கதவை உடைத்து மளிகைக் கடைக்குள் வைத்து இருந்த வெங்காயம் மற்றும் மைதாவினை சாப்பிட்டுச் சென்றது.

இதே கடைக்குள் கடந்த இரண்டு மாதங்களில் ஆறு முறை படையப்பா கதவை உடைத்து உணவுப் பொருட்களைத் தின்று சென்றது குறிப்பிடத்தக்கது.

மற்றொருபுறம், சூரிய நெல்லி பகுதியில் உள்ள ஏலச் செடிகளை மற்றும் அங்கு உள்ள வீட்டைக் கொம்பன் என்னும் காட்டு யானை முற்றிலுமாக சேதப்படுத்தி உள்ளது

தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைகளைக் குறிவைத்து அட்டகாசம் செய்து வரும் கொம்பன் மற்றும் படையப்பா காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூணாறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்