அண்ணாமலையாரைக் காண கால் கடுக்க காத்து கிடந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்வதும், அண்ணாமலையாரைத் தரிசிப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன்படி நேற்று இரவு தொடங்கிய பௌர்ணமி இன்று இரவு முடிவடைவதால் நேற்று பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரண்டாவது நாளான இன்றும் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணாமலையாரைக் கோவிலில் தரிசனம் செய்வதற்காகக் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் இல்லாமல் இருக்கக் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பந்தல் அமைத்திருந்தாலும் பந்தலைத் தாண்டியும் ஒரு கிலோமீட்டர் அளவுக்கு வரிசையில் நின்று கோவிலுக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கோவிலிலிருந்து 14 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள கிரிவலத்தைக் கிரிவலம் சென்று தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை