டெல்லி செல்லும் விமானம் திடீர் ரத்து..!

டெல்லி செல்லும் விமானம் திடீர் ரத்து..!

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திலிருந்து டெல்லி செல்வதற்காக விமானம் தயார் நிலையில் இருந்தது.

அப்போது, ஓடுபாதைக்கு விமானத்தைக் கொண்டுசெல்லும் தள்ளு வாகனத்தின் கம்பி உடைந்தது. உடைந்த கம்பியின் பாதி பகுதி விமானத்தில் சிக்கிக் கொண்டது.

இதனால், அந்தக் கம்பியை உடனடியாக எடுக்கமுடியாத சூழல் நிலவியது. தொடர்ந்து டெல்லிக்கு செல்லவிருந்த இந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பயணிகளை மாற்று விமானத்தில் அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திடீரென நடந்த இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு சூழல் ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள விமான போக்குவரத்து ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்