ஈபிஎஸ் Vs ஓபிஎஸ்... முடிவை நெருங்கும் க்ளைமேக்ஸ்... தள்ளி வைக்கப்படுகிறதா இடைத்தேர்தல்..?

ஈபிஎஸ் Vs ஓபிஎஸ்... முடிவை நெருங்கும் க்ளைமேக்ஸ்... தள்ளி வைக்கப்படுகிறதா இடைத்தேர்தல்..?
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை விட அதிமுகவின் உட்கட்சி பூசல் தகித்துக் கொண்டிருக்கிறது. என்ன வந்தாலும் சரி, கொங்கு மண்டலத்திலும், ஈரோடு இடைத்தேர்தலில் தன் பலத்தை நிரூபித்தே ஆக வேண்டும் என புயலகாக கிள்ம்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருக்க, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக யாருக்கு என்கிற கேள்விக்கு விடையளைக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பொதுக்குழு வழக்கில் அனைத்துத் தரப்பினரும் எழுத்துப்பூர்வமான தங்களது வாதங்களை கடந்த 16ம் தேதி தாக்கல் செய்தனர். இந்நிலையில் இடைக்கால பொதுச்செயலாளரான ஈபிஎஸ் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க, இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளார். இந்த முறயீட்டை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, இது தொடர்பாக மூன்று நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ஓ.பி.எஸ் தரப்புக்கும், தேர்தல் அணையத்துக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். இதற்கிடையே பாஜகவின் ஆதரவு இரு தரப்பில் யாருக்கு என்பது சஸ்பென்ஸாக தொடர்கிறது. 

அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என சசிகலா கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். இத்தனை விஷயங்களுக்கு மத்தியில் எடப்பாடி தரப்பு இடையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வரை தேர்தல் ஆணையம் காத்திருந்து  இடைத்தேர்தலை தற்காலிகமாக ரத்து செய்து தேர்தலை ஒத்தி வைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் தேர்தலை தள்ள் வைப்பதற்கான சூழல் ஏற்படாது என தேர்தல் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் அரசியல் நிலவரங்களை பரபரப்புடன் வைத்திருக்கும் என்பதே நிதர்சனம். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்