இந்தியாவின் பணவீக்கம் 5.5 சதவீதமாக குறையும்: ஐ.நா. ஆய்வறிக்கை

இந்தியாவின் பணவீக்கம் 5.5 சதவீதமாக குறையும்: ஐ.நா. ஆய்வறிக்கை
உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஐ.நா. அறிக்கை வெளியிட்டது. இதில் நடப்பு 2023ம் ஆண்டில் பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலை ஏற்றத்தாழ்வு குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. 

அதில், உலக அளவில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வட்டி விகிதங்கள் அதிகரிப்பு என்பது பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது முதலீட்டு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சர்வதேச ஏற்றுமதி வளர்ச்சியில் பின்னடைவையும், வேலைவாய்ப்புகளையும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த ஆய்வறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: 

2023-ல் இந்தியாவின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2022-ல் மதிப்பிடப்பட்ட 6.4 சதவீத வளர்ச்சியை காட்டிலும் 0.6 சதவீதம் குறைவாகும். 2023-ல் இந்தியாவின் வளர்ச்சி மிதமான வேகத்திலேயே இருக்கும். இருப்பினும், 2023-24 காலக்கட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக இருக்கும் என்ற முந்தைய மதிப்பீட்டில் மாற்றம் எதுவும் இல்லை.

பல்வேறு கடினமான சூழல்களால், அடுத்த ஆண்டில் நடைபெறும் சர்வதேச வர்த்தகத்தில் 0.4 சதவீத பின்னடைவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவ்வாண்டில் உலக பொருளாதாரம் 1.9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி காணும்.

கடந்தாண்டில் 7.1 சதவீதமாக இருந்த இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 2023-ல் 5.5 சதவீதமாக குறையும். சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை குறைவு, ரூபாய் மதிப்பு வலுப்பெறுவது இறக்குமதிக்கான பணவீக்கத்தை குறைக்க உதவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்