லடாக் எல்லை சுற்றுலா தலமாகிறது: சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க நடவடிக்கை

லடாக் எல்லை சுற்றுலா தலமாகிறது: சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க நடவடிக்கை
இந்தியாவின் லடாக் எல்லைப்பகுதியில் அவ்வப்போது சீன ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி வருகிறது. இருநாட்டு வீரர்களும் அடிக்கடி மோதிக்கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. 

இந்நிலையில் லடாக் எல்லைப் பகுதியை ஒட்டிய சீன பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இந்த சூழலில் கடந்த வாரம் நடைபெற்ற இந்திய அளவிலான காவல் துறை தலைவர்கள் மாநாட்டில் லடாக் எல்லை தொடர்பாக விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், “சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் ஒரு கட்டமாக லடாக்கின் எல்லைப்பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை அதிகரிக்கச் செய்ய வலியுத்தப்பட்டது. அதற்கு லடாக் எல்லைப் பகுதிகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் வந்து செல்லும் வகையில் பிரபல சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்