ஈரோடு கிழக்கில் காங்கிரசை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும் - ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், நிச்சயம் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சியில் இரட்டை தலைமை பிரச்சனை, கடந்த சில மாதங்களாக உச்சநிலை உள்ளது. பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் நீக்கினார். பன்னீர் செல்வம் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமியை நீக்கினார்.
இந்நிலையில் பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தமாகா தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்துளளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட உள்ளதாகவும், எடப்பாடி தலைமையிலான அதிமுக, இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடும் எனவும், அதில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார். காங்கிரசை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும் என்று ஜெயகுமார் கூறினார்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே