இலங்கை அதிபருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு .... நிதி நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தை

இலங்கை அதிபருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்  சந்திப்பு .... நிதி நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தை
கொழும்புவில் இலங்கை அதிபருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்ட  வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று மாலை  இலங்கை சென்றடைந்தார். தலைநகர் கொழும்பில் அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அவரை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரவு விருந்து அளித்தார். முன்னதாக இலங்கை வெளியுறவு அமைச்சர்  அலி சப்ரியையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். 

அப்போது பரஸ்பர நலன் மற்றும் பிராந்திய நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை சர்வதேச நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் கடன் பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. 

இதற்காக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் உத்தரவாதத்தை சர்வதேச நிதியம் கேட்டுள்ளது. இச்சந்திப்பில் உட்கட்டமைப்பு, தொடர்புகள், எரிசக்தி, தொழில்துறை மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களில்  இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இது தொடர்பாக இந்தியாவுடன் இலங்கை பேசிவரும் நிலையில், ஜெய்சங்கரின் இந்த இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்