கொரோனாவில் இருந்து பாடம் கற்கவில்லை ... ஐ. நா. பொதுச்செயலாளர்

கொரோனாவில் இருந்து பாடம் கற்கவில்லை ... ஐ. நா. பொதுச்செயலாளர்
உலக நாடுகள் கொரோனாவில் இருந்து பாடம் கற்கவில்லை என்றும்,  வரவிருக்கும் பெருந்தொற்றுகளுக்கு சிறிதளவு கூட தயாராகவில்லை என
ஐ. நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். 

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது.  அதில், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ  கலந்துகொண்டு பேசினார். அப்போது, "வெப்பநிலை அதிகரிப்பு பருவநிலை மாற்றமும்  சவாலாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் அதிர்ச்சியூட்டும் பருவநிலை மாற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

 வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டது. இதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். பூமியின் பெரும்பாலான பகுதிகள், வாழத்தகுதியற்றதாக ஆகிவிடும். பலருக்கு இது ஒரு மரண தண்டனையாக இருக்கும்" என்று தெரிவித்தார். 

 "முதலில், குறுகிய கால சர்வதேச பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. உலகின் பல பகுதிகள், பொருளாதார பின்னடைவை சந்தித்தன. ஒட்டுமொத்த உலகமும் மந்தநிலையை சந்தித்து வருகிறது. கொரோனா தொற்று, இன்னும் பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. எதிர்கால பெருந்தொற்றுகளை சந்திக்க தயாராக உலகம் தவறி விட்டது. நாம் தாங்கிக்கொண்ட போதிலும், கொரோனாவில் இருந்து பாடம் கற்கவில்லை. வரவிருக்கும் பெருந்தொற்றுகளுக்கு சிறிதளவு கூட தயாராகவில்லை.

இத்துடன், வன்முறை, போர் ஆகியவையும் சவால்களாக உள்ளன.  இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது கடினம். இருப்பினும், பாதிப்பை கட்டுப்படுத்தலாம். அதற்காக அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டிய தருணம் வந்து விட்டது.பருவநிலை, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்