3 மாநில தேர்தல் தேதி ; இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட 3 வடகிழக்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைக்கான தேதிகள் அறிவிக்கப்படவுள்ளது. 3 மாநிலங்களின் சட்டசபை பதவி காலம் மார்ச் மாதத்தில் நிறைவடைகிறது. 60 தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. திரிபுராவில் பாஜக ஆட்சியும், மேகாலயா, நாகாலாந்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது.
அண்மையில் குஜராத், ஹிமாச்சலில் பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டமாக 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. தேதி அறிவிக்கப்பட்டால் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிடும்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே