விமனத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம்... திடீர் திருப்பம்

விமனத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம்...  திடீர் திருப்பம்
நியூயார்க்கில் இருந்து டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் அருகில் இருந்த சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் தற்போது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம் இது குறித்து காவல்நிலையத்தில் அதிகாரபூர்வமாக புகார் ஒன்றை அளித்தது. அதனைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சி சம்பவம் பொது அரங்கில் வெளியானது.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சங்கர் மிஸ்ரா என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. ஊடகங்களில் அவரின் புகைப்படமும் வெளிவந்தது. அவர் தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. ஆனால், அவரின் மொபைல் எண்ணை வைத்து அவர் பெங்களுருவில் இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு பதுங்கி இருந்த சங்கர் மிஸ்ராவை போலிஸார் அதிரடியாக கைது செய்து டெல்லிக்கு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் முன்பு சங்கர் மிஸ்ரா அழைத்து வரப்பட்ட போது அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், அவர் வேலை செய்து வந்த வெல்ஸ் பார்கோ என்ற அமெரிக்க நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், விமானத்தில் பெண் மீது நான் சிறுநீர் கழிக்கவில்லை என சங்கர் மிஸ்ரா பதில் கூறியுள்ளார். அந்த பெண்ணுக்கு சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத Incontinence என்ற பிரச்னை உள்ளது. அதனால் அவரேதான் இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார் என்றும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்