"நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்" - இசைப்புயலின் இன்ஸ்டா பதிவு !

1992-ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ”ரோஜா ”திரைப்படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

இன்று உலகளவில் ஆஸ்கர் நாயகன் என அனைவராலும் அறியும் படியாக திரைத்துறையில் உச்சம் தொட்டவர் ஏ.ஆர்.ரகுமான்.

சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’திரைப்படம் உலக முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற வருகிறது. மேலும் அதில் இருக்கும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளதாக அமைத்துள்ளது.

 ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் புதிதாக எலக்ட்ரிக் கார் வாங்கியுள்ளார். இந்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் அவருடைய மகள்கள் இருவரும் இருந்தனர். 

மேலும் இப் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது :-"நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்