அம்மை நோயால் கால்நடைகள் பாதிப்பு : முகாம் அமைத்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

அம்மை நோயால் கால்நடைகள் பாதிப்பு : முகாம் அமைத்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆடு மாடு வளர்த்து அதிலிருந்து பால் உற்பத்தி வாயிலாக கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில்  தற்போது வேகமாக பரவி வரும்  அம்மை நோய் கால்நடைகளை அதிகளவு பாதித்து வருகிறது. இந்த நோயானது தற்போது அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி கால்நடைகளை குறுகிய நாட்களுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். 

மேலும் தற்போது பாரூர் மோட்டுபட்டி, வெற்றிலைக் காரனூர், உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது அதிகளவில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கி உள்ளதால் கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் பெரும் கவலை அடைந்துள்ளனர். 

காட்டுக்கொள்ளை பகுதியை சேர்ந்த சுக்கிரியா என்பவரின் பசுமாடுக்கு அம்மை நோய் தாக்கி சிறியளவு கொப்பளங்கள் உருவாகி சில நாட்களில் வேகமாக உடலின் அனைத்து பாகங்களுக்கும் உடல் முழுவதும் தீ காயம் போன்று வடுக்களாக உள்ளது. 

இதனால் அந்த பசுமாடு வலியால் அவதிபட்டு வருகிறது. மேலும் பல முறை சிகிச்சை அளித்தும் குணமாகமல் இருப்பதை பார்த்து மாட்டின் உறிமையாளர். கண்கலங்கி வேதனையில் உள்ளனர். 

இதே போல் மோட்டுபட்டியை சேர்ந்த அமராவதி, சாளா, விஜயகுமார், இவர்களது பசுமாடுகளுக்கும் அம்மை நோய் தாக்கியுள்ளது. இதனால் அந்த பசுமாடுகள் பார்க்க பரிதாபமாக காட்சி அளிக்கிறது. 

மேலும் 100க்கும் மேற்பட்ட மாடுகளும் தொடர்ச்சியாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன் அவர்களிடம் கேட்ட பொழுது தற்போது தடுப்பூசிகள் அனைத்தும் கையிருப்பில் உள்ளது இதுகுறித்து உதவி இயக்குனர் அருள்ராஜ் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டு உடனடியாக முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு உதவ ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்