தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டத்தில் மாற்றம் …?

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டத்தில் மாற்றம் …?

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி பெங்களுருவில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்து மீண்டும் தனி ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராம பல்கலைக்கழகம் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட தளத்தில் இறங்கி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டருக்கு பதில் காரில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து காரில் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி மதுரையில் இருந்து காந்தி கிராமம் பல்கலைக்கழகம் வரை 58 கிலோ மீட்டர் காரில் செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்