நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை - திமுக தலைமை அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை - திமுக தலைமை அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக வரும் 12-ம் தேதி திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்யவுள்ளார்.

2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அந்த வகையில் திமுகவும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க முடிவு செய்துள்ளது. 

234 தொகுதிகளில் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆன்லைன் மூலம் ஆலோனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தியிருக்கிறது. 2024ம் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் என சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திமுகவின்  72 மாவட்டச் செயலாளர்களின் மூலம்  நாடாளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை என்ன செய்யப்பட்டது என்பதைக் கேட்டறிந்து புதிய அறிவுரைகளும் வழங்கவுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்