நடிகர் தனுஷூடன் இணையும் கன்னட சூப்பர் ஸ்டார்!

நடிகர் தனுஷூடன் இணையும் கன்னட சூப்பர் ஸ்டார்!

தனுஷ் நடிப்பில் தயராகி வரும்  கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர்  இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். 

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். 

மேலும், தென்காசியில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு  நேற்று நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் நடிகர் தனுஷூடன் கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷிவ ராஜ்குமார் இணைய உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

1930களில் காலகட்டத்தில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர்  உருவாகிவருகிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்