Amitabh Bachchan Reply Tweet: ரஜினியின் வாழ்த்து ட்வீட்டும், அமிதாப்பின் நன்றி ட்வீட்டும்...

Amitabh Bachchan Reply Tweet: ரஜினியின் வாழ்த்து ட்வீட்டும், அமிதாப்பின் நன்றி ட்வீட்டும்...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 80 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி இந்தியா முழுவதும் உள்ள திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை வாரிக்குவித்தனர்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும் அமிதாப் பச்சன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் ட்வீட் பதிவிட்டார். அதில், “நீங்கள் ஒரு லெஜண்ட்... எப்போதும் என்னை ஊக்கப்படுத்திய நபர்... இந்திய திரைப்பட உலகில் சகோதரத்துவத்தின் உண்மையான உணர்வை ஊட்டியவர். 80ம் அகவையில் நுழையும் அமிதாப் ஜி-க்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். மிகுதியான அன்புடனும் வாழ்த்துக்களுடனும்..” என பதிவிட்டிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமிதாப் பச்சனும் ட்வீட் செய்தார். அதில், “ரஜினி சார்... நீங்கள் எனக்கு மிகுதியாக மதிப்பை தந்திருக்கிறீர்கள். உங்களது புகழோடும் மகிமையோடும் என்னை ஒப்பிட முடியாது. நீங்கள் எனது திரையுலக நண்பர் மட்டுமல்ல... அன்பு மிகுந்த நண்பரும் கூட... உங்களது அன்பையும், வாழ்த்தையும் நான் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன். என்றும் அன்புடன்” என பதில் ட்வீட் செய்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்