திமுக ஆட்சியில் பொய் பித்தலாட்டம் அதிகம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

திமுக ஆட்சியில் பொய் பித்தலாட்டம் அதிகம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

திமுக ஆட்சியில் பொய் பித்தலாட்டம் அதிகம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, “ஓபிஎஸ்க்கு சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சபாநாயகர் இடம் வழங்கக் கூடாது.

நான் சபாநாயகராக இருந்தால் நிச்சயம் இடம் வழங்க மாட்டேன். சபாநாயகர் சட்டமன்ற விதிகளை மதிப்பவரா மீறுபவரா என்பது 17ஆம் தேதி தெரிந்து விடும்.

திமுக 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது. போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்திருக்க வேண்டும்.

மக்களுக்கு இதயமாக உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை பலருக்கு உதவியாக உள்ளது.  அதைத் தலைமைச் செயலகமாக மாற்ற நினைத்தால் அதிமுக பார்த்துக் கொண்டிருக்காது.

மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் எல்லாம் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. தேங்கியுள்ள மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு, ப்ளூ போன்ற காய்ச்சல்கள் பரவ வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையிலேயே நிலைமை இவ்வாறு உள்ளது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிக அதிகமாக மழை பெய்யும் என்று எச்சரிக்கின்றனர். போர்க்கால அடிப்படையில் பணிகள் முடித்திருக்க வேண்டும். பல மாதங்களாக பள்ளங்களை வெட்டி போட்டு பணியை முடிக்காமல் வைத்திருக்கிறார்கள்.

எங்கள் ஆட்சியில் வொர்க் மோர், டாக் லெஸ் என்பதுதான். ஆனால் இந்த ஆட்சியை பொருத்தவரை டாக் மோர் ,ஒர்க் லேஸ் தான்.

ஜெயலலிதா எழில்மிகு சென்னை என ஒரு சிறந்த திட்டத்தை கொண்டு வந்து நிறைய செய்தார்கள். இவர்கள் சிங்கார சென்னை என்று சொல்கிறார்கள் ஆனால் சிங்காரச் சென்னை ஆகவா உள்ளது. டெங்கு, காலரா, ப்ளூ சென்னை ஆக உள்ளது.

இந்த ஆட்சியில் லேபிள் ஒட்டும் பணியை மட்டும் தான் செய்து வருகிறார்கள். நாங்கள் அடிக்கல் நாட்டி முடித்த பணியை தொடங்கி வைப்பார்கள் இது தான் திமுகவின் வேலை.

எங்களை பொறுத்தவரை ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

மழை வந்தால் திமுகவின் சாயம் வெளுத்து விடும். 2024 ல் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும்.

நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது. இதை எல்லாம் விட்டு விட்டு ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். இது எல்லாம் ஒரு பிரச்சனையா. இவர்கள் அரசியலிலும் திரைப்படத்திலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இது குறித்து ஒரு ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கலாம் இதுதான் நான் இவர்களுக்கு கொடுக்கும் அட்வைஸ்.

ஜே.சி.டி பிரபாகரன் 41,000  கோடி குறித்த கேள்விக்கு,  ஓ.பி.எஸ் பினாமி பணம் எல்லாம் அவரிடம் தான் உள்ளது. ஆதாரம் இல்லாமல் எது வேண்டுமானால் பேசலாம் என்று இல்லை. பகுத்து அறிந்து ஆய்ந்து பேச வேண்டும். திமுக தாக்கம் இருக்கிறது வேறு ஒன்றும் இல்லை” என விமர்சித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்