மயிலாடுதுறை: பிரபல சீவல் கம்பெனியில் சீவல் திருடிய இருவர் கைது

மயிலாடுதுறை: பிரபல சீவல் கம்பெனியில் சீவல் திருடிய இருவர் கைது
மயிலாடுதுறையில் உள்ள பிரபல சீவல் கம்பெனியில் சீவலை திருடி விற்பனை செய்து தனி கம்பெனி நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை பட்டமங்கலம் ஆராய தெருவில் கருணாகரன் என்பவர் எஸ் மார்க் என்ற பெயரில் சீவல் கம்பெனி நடத்தி வருகிறார். இவரிடம் வழு ஊரைச் சேர்ந்த மாரியம்மாள் திருநள்ளாறை சேர்ந்த ஜனகர் என்பவர்கள் வேலை பார்த்து வந்தனர். 

கம்பெனியில் தினமும் ஒரு மூட்டை சீவல் மாயமாகவே கருணாகரன் இது குறித்து மயிலாடுதுறை காவல்துறையில் புகார் செய்தார். 
இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், சீவல் கம்பெனியில் இருந்து தினமும் ஒரு மூட்டை சீவலை மாரியம்மாளும் ஜனகரும் சேர்ந்து திருடி மாரியம்மாளின் வீட்டில் வைத்து அதை எஸ் மார்க் என்ற கவரிலேயே பேக்கிங் செய்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. 

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மாரியம்மாள் மற்றும் ஜனகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்