மின்கட்டண உயர்வு: தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மின்கட்டண உயர்வு: தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, தேர்தலின் போது திமுகவிற்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பேசியபோது, “நீட் தேர்வை பொறுத்தவரை பாஜகவுக்கு அரசியல் செய்ய வேண்டிய நோக்கம் கிடையாது. தமிழ்நாட்டில் ஆரம்ப காலங்களில் நீட் தேர்வால் பிரச்னை இருந்தது உண்மை தான். காரணம், தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த பாடத்திட்டத்திற்கும், நீட் தேர்விற்கு தயாராவதற்கான பாடத்திட்டத்திற்கும் பல வித்தியாசங்கள் இருந்தன.

பாடத்திட்டம் மாற்றமடைந்த பின், மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதை திமுக அரசு நிறுத்த வேண்டும். 

நீட் தேர்வை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. எந்த மாநில முதலமைச்சர்களும் நீட் வேண்டாம் என எதிர்க்காத போது, தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் நீட் வேண்டாம் என எதிர்த்து, மாணவர்களின் மன தைரியத்தை உடைத்து வருகிறார். 

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தேவையற்றது. இது தமிழகத்தின் கருப்பு நாள். மின் கட்டண விலை உயர்வை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தேர்தலில் திமுகவிற்கு பெரிய அடியாக இது இருக்கும். ராகுல் காந்தி பாதை யாத்திரை என்பது மக்களை இணைப்பதா அல்லது பிரிப்பதா என்பது தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.38%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.13%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்