டால்கம் பேபி பவுடரை நிறுத்த போவதகா ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு

 டால்கம் பேபி பவுடரை நிறுத்த போவதகா ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு

குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் டால்கம்  பேபி பவுடரை நிறுத்த போவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது .

ஆயிரக்கணக்கான வழக்குகள் காரணமாக  டால்கம் பேபி பவுடர் விற்பனையை உலக அளவில் நிறுத்த போவதாக  ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது .

டால்கம் பேபி பவுடரில் உள்ள கனிமங்களால் புற்று நோய் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் மட்டும் 40 ஆயிரத்து 300 வழக்குகள் தொடுக்கப்பட்டதால்,அமெரிக்காவிலும் கனடாவிலும் டால்கம் பேபி பவுடர் விற்பனையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டது .

இந்த நிலையில் 2023 ஆண்டில் உலகளவில் டால்கம் பவுடரை நிறுத்த போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது .அதோடு பவுடரில் கனிமங்களைப் பதிலாகச் சோளமாவைப்  பயன்படுத்தவும் முடிவு எடுத்துள்ளது.

எனவே வழக்குத் தொடுத்தோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக 200 கோடி டாலர்களையும் ஒதுக்கியுள்ளது .

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.56%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.91%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.53%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்