தீரன் சின்னமலைக்கு முதல்வர் ஸ்டாலின் புகழ் வணக்கம்

தீரன் சின்னமலைக்கு முதல்வர் ஸ்டாலின் புகழ் வணக்கம்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு என் புகழ் வணக்கம் என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

ஆகஸ்ட் 3-ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .இந்த நிலையில் அவரது நினைவு தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை பற்றி பதிவிட்டிருக்கிறார் .அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது ;

தாயகத்தின் மானத்துக்கு இழுக்கு நேர்ந்தபோது, தன்னுரிமை மிதித்துத் துவைக்கப்படும்போது, 

"சின்னமலை வரிதரமாட்டான்!ஆங்கிலேயருக்கு அடிபணிய மாட்டான்!" என முழங்கி, உயிர் போகும் வேளையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத விடுதலை வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அவருக்கு என் புகழ் வணக்கம். என்று குறிப்பிட்டுள்ளார் 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்