செஸ் ஒலிம்பியாட் 5-வது சுற்று ; செஸ் உலகின் இளவரசனான மேக்னஸ் வெற்றி

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5-வது சுற்றில் உலக சாம்பியனான நார்வேவின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார் .
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது .இப் போட்டி ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிற இந்த சர்வதேச செஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து பல வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் போன்ற சுமார் 3000 நபர்கள் வந்துள்ளனர் .
இந்த நிலையில் இன்று நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5-வது சுற்றில் நார்வே நாட்டை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் , ஜாம்பியா வீரர் கிலன் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் 26வது நகர்த்தலில் ஜாம்பியா வீரரை வீழ்த்தி மாக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.