44 -வது செஸ் ஒலிம்பியா போட்டியில் சீனா பங்கேற்கவில்லை

44 -வது செஸ் ஒலிம்பியா போட்டியில் சீனா பங்கேற்கவில்லை


மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற ஜூலை 28 - ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 - ஆம் தேதி வரை 44 - வது செஸ் ஒலிம்பியா போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு தனிக் குழு அமைத்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது

 அந்த வகையில்,  செஸ் ஒலிம்பியாட்டின் முதல் ஜோதி ஓட்டம் டெல்லியில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இந்திராகாந்தி மைதானத்தில் இந்த ஜோதி ஓட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம், 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் நடந்து வருகிறது. 



அதோடு ஜூலை 27-ஆம் தேதி ஒலிம்பியாட் ஜோதி, மாமல்லபுரத்தை வந்தடையும் எனக் கூறப்படுகிறது.

 இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 ஏற்கனவே ரஷ்ய மற்றும் பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்குத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது சீனா தானாகவே பங்கேற்க முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்