குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் மறைவுக்கு எழுத்தாளர் மாலன் இரங்கல்

குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் மறைவுக்கு  எழுத்தாளர் மாலன் இரங்கல்

குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் மறைவுக்கு  எழுத்தாளர் மாலன் இரங்கல்  தெரிவித்துள்ளார் . 

நானும் சிறிது காலத்திற்குப் பின் பிரபஞ்சனும் விலகிய பிறகு எஸ் ஏ பி நான்கு இளைஞர்களைத் தெரிவு செய்து ஒரு புதிய teamஐ கட்டமைத்தார். ரஞ்சன்,  மணிகண்டன், கிருஷ்ணா டாவின்சி,பிரகாஷ் என்ற நால்வரில் பிரகாஷ் என்ற பிரியா கல்யாணராமன் தான் குமுதத்தில் நீடித்த்வர் மற்றவர்கள் பல்வேற் சொந்தக் காரணங்களுக்காக விலகிச் சென்றனர். திறமைசாலி. பத்திரிகைக்குத் தேவையான எந்த வகையான் எழுத்தையும் எழுதுவதில் இன்னொரு ரா.கி.ரங்கராஜன். நான்  மீண்டும் குமுததில் இணைந்துஅதன் ஆசிரியராகக்  கடமையாற்றிய போது என்னுடன் பணியாற்றியவர் என்பதால் இதை அனுபவப் பூர்வமாகச் சொல்லமுடியும். குமுதம் ஒரு பத்திரிகையாகவும் நிறுவனமாகவும் அழுத்தங்களை எதிர்கொண்ட ஒரு காலகட்டத்தில் அந்த அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துத் தாக்குப் பிடித்தவ்ர்.

என்னைக் கடைசிவரை ஓர் ஆசிரியருக்கான மரியாதையுடனும் அன்புடனும் நடத்தினார். இருவாரங்களுக்கு முன்பு கூடத் தீராநதி பற்றி கலந்தாலோசித்தார்.

எனக்கு இது ஓர் இழப்பு  தனது இரங்கலை எழுத்தாளர் மாலன் கூறியுள்ளார் .

Find Us Hereஇங்கே தேடவும்