கல்லூரி முதல்வரை அறைந்த எம்.எல்.ஏ!

கல்லூரி முதல்வரை அறைந்த எம்.எல்.ஏ!

கர்நாடகாவில் உள்ள அரசு ஐடிஐ கல்லூரியில் ஆய்வுக்கு சென்ற எம்.எல்.ஏ., அக்கல்லூரியின் முதல்வரை கன்னத்திலேயே அறைந்துள்ளார்.

மாண்டியாவில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கு சென்ற மதர்ச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஸ்ரீனிவாஸ், அக்கல்லூரி முதக்வர் நாகநாத்திடம் அது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஆனால், கல்லூரி முதல்வர் அளித்த பதில் எம்.எல்.ஏவுக்கு திருப்தியாக இல்லை போலும் அதனால் அங்கிருந்த யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையிலே அவரை கன்னத்தில் இருமுறை அறைந்ததோடு அவரை சரமாரியாக திட்டியதாகவும் தெரிகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்