ஒற்றைத்தலைமை வேண்டும் என ஓபிஎஸ் -க்கு ஆதரவாகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு :

ஒற்றைத்தலைமை  வேண்டும் என  ஓபிஎஸ் -க்கு ஆதரவாகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு :

அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று ஓபிஎஸ் -க்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

அதிமுக ஒற்றைத்தலைமை  கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன . இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் .

ஓ. பன்னீர் செல்வம் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் வைத்தியலிங்கம் , மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் .இந்நிலையில் 2வது நாளாக ஓ.பன்னீர்  செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் நிலையில் ,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனியே ஆலோசனை நடத்தி வருகிறார் .

இ.பி.எஸ் -க்கு  ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி , எம்.எல். ஏக்கள் ஒரு சிலரும் நேரில் சந்தித்துப் பேசி வருகின்றன . ஆனால் அதிமுகவுக்கு  ஒற்றைத் தலைமை வேண்டும் எனத் தேனீ , சென்னை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓ. பி.எஸ் -க்கு ஆதரவாகத் தொண்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

இதேபோல் ஓ.பி .எஸ் -க்கு ஆதரவாகவும் இ.பி.எஸ் ஆதரவாகவும் தொண்டர்கள் மாறி மாரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறன . 

ஆகவே அதிமுக பொதுக்குழு வருகிற ஜூன் 23 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது .இது குறித்து விவாதிக்கத் தலைமை கழக நிர்வாகிகள் , பொதுச் செயலாளர் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது .

Find Us Hereஇங்கே தேடவும்