தமிழகத்தில் உள்ள தனியார் வாகனங்களை ஆய்வு செய்யும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள்

தமிழகத்தில் உள்ள தனியார் வாகனங்களை  ஆய்வு  செய்யும்  போக்குவரத்துத் துறை அதிகாரிகள்

தமிழகத்தில் வருகிற ஜூன் 14 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் அனைத்து தனியார் வாகனங்களையும் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன .

கோடை விடுமுறை அடுத்து வருகிற ஜூன் 14 ஆம் தேதி 1 முதல் 10 -ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ  மாணவிகளுக்குப் பள்ளிகள் திறக்கப் படுகிறது .பள்ளிகள் திறப்பு குறித்துப் பல முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன 

 இந்த நிலையில் பள்ளிகள் திறக்க இன்னும்  இரண்டே நாட்கள் மட்டும் உள்ளதால் , தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுமாறு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது .

அதன் முதற்கட்டமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன .அதோடு  வாகனங்களில் குறிப்பிட்ட இடத்தில்  சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் மாணவர்கள் ஏறும் வழி இறங்கும் வழியில் உள்ள படிக்கட்டுகள் கதவுகள் உறுதியாக உள்ளதா என்று ஆய்வு  செய்து வருகின்றன.

மேலும் வேகா கட்டுப்பாட்டுக் கருவிகள் ,தீயணைப்பு கருவிகள் , அவசரக் காலத்தில் வெளியேறும் வசதிகள் உள்ளதா, உரிய மருந்துகளுடன் கூடிய  முதலுதவி பெட்டிகள் ,  அதோடு  ஓட்டுநர்களின்  உரிமம் மற்றும் சுய விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன . 

Find Us Hereஇங்கே தேடவும்