”தமிழ்நாடு எனக்கு மாமியார் வீடு” – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் ரோஜா பேட்டி

”தமிழ்நாடு எனக்கு மாமியார் வீடு” – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் ரோஜா பேட்டி

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஆந்திரா மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா தமிழ்நாடு எனக்கு மாமியார் வீடு கூறியுள்ளார்.

கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் திரைப்பட நடிகை ரோஜா. தற்போது முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சரவையில் ரோஜாவிற்கு சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அமைச்சர் ரோஜா கோயிலுக்கு வருகை புரிந்தார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் குங்குமம் அர்ச்சனை செய்து தனது வேண்டுதலை நிறைவேற்றிய பின் வெளியே வந்த அமைச்சர் ரோஜாவை பொதுமக்கள் சூழ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா ”தாய் வீடான ஆந்திராவில் பலர் நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் மாமியார் வீடான தமிழ்நாட்டிலும் எனக்காக பிரார்த்தனை செய்தனர். அதற்காக அனைவருக்கும் நன்றி. மேலும், ஆண்டுதோறும் காமாட்சி அம்மனை வந்து வழிபாடு செய்வேன். என்னுடைய வேண்டுதலை காமாட்சி அம்மன் நிறைவேற்றியுள்ளார். எந்த ஒரு காரியம் தொடங்குவதற்கு முன்பாக காமாட்சி அம்மனை வேண்டி செல்வது வழக்கம் என கூறினார். தற்போது ஆந்திரா அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்ற நிலையில் காமாட்சி அம்மனை தரிசனம் செய்து இரட்டை புத்துணர்ச்சியோடும், இரட்டை மகிழ்ச்சியோடும் மக்களுக்கு சேவை செய்ய சென்று கொண்டிருப்பதாக ரோஜா தெரிவித்தார்.

மேலும், தாய் வீடான ஆந்திராவிலும், மாமியார் வீடான தமிழ்நாட்டிலும் நான் அமைச்சராக பதவியேற்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.

Find Us Hereஇங்கே தேடவும்