ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததைக் கண்டித்து 2வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேரையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து சிறையில் அடைத்தது.

இதனை அடுத்து ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தி நேற்று ஒரு நாள் வேலை  நிறுத்ததில் ஈடுபடப்போவதாகத் தீர்மானம் நிறைவேற்றினர். இதை அடுத்து இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று 2வது நாளாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் தங்களுடைய படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள், நாளை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்