வனத்தில் நிலவும் வறட்சி- ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகள்!

வனத்தில் நிலவும் வறட்சி- ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகள்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் கரிமொரா கிராமம் பகுதியில் இன்று காலை உலாவந்த காட்டு யானைக்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு கடந்த வாரம் வந்த 9 காட்டு யானைகள் கல்லார், பர்லியர், ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக முகாம் இட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று சின்னகரும்பாலம், கிளண்டேல், ரண்ணி மேடு போன்ற பகுதிகளில் முகாம் இட்டிருந்த இந்த யானை கூட்டம், கிளண்டேல், ரண்ணி மேடு போன்ற பகுதிகளில் முகாம் இட்டிருந்த இந்த யானை கூட்டம், சின்னக்கரும்பாலம் வழியாக கரிமெரா கிராமத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் இன்று காலை உலா வந்தன.

கடந்த ஐந்து அண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளில் வந்த இந்த யானை கூட்டம் கேத்தி பகுதிகளில் ஒருவரை தாக்கி கொன்றது, அதன் பிறகு தற்போது மீண்டும் வரத் துவங்கியதால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குடியிருப்பிற்கு மிக அருகில் சுற்றி வந்த இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிகளில் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வந்த துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்