வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்பதே நோக்கம் – ஸ்டாலின் பேச்சு

வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்பதே நோக்கம் – ஸ்டாலின் பேச்சு

வறுமை

இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்பதே நோக்கம் – ஸ்டாலின் பேச்சு

சேலத்தில் 31 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்

விழா மற்றும் நமக்கு நாமே திட்டத்தை துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது,

பல வரலாற்று சிறப்பு மிக்க பெருமை கொண்டது சேலம்.

திராவிட இயக்க வரலாற்றில் சேலத்திற்கு முக்கிய பங்கு உள்ளது.

பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை திமுக ஆட்சியில் மீண்டும் துவங்கியது.

 

சேலத்திற்கு ஏற்கனவே செய்த திட்டங்களை விட கூடுதல் திட்டங்கள்

கொண்டு வரப்படும். 16 மாவட்டங்களில் உள்ள மக்களை சந்தித்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

 

மக்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படுகிறது. ஒவ்வொரு

தனி மனிதனின் வாழ்க்கை மேம்பாட்டை மனதில் வைத்து அரசு செயல்படுகிறது.

 

1242 கோடி மதிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்டங்களை

பாகுபாட்டுடன் திமுக அரசு பார்க்காது. இந்தியாவில் வறுமை குறைந்த மாநிலங்களில் தமிழகம்

4வது இடத்தில் உள்ளது. இது திருப்தி அளிக்கவில்லை. வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற

வேண்டும் என்பதே நோக்கம்.

 

மழை பாதிப்பு பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மக்கள் பெருமையாக

பார்க்கிறார்கள்.

Find Us Hereஇங்கே தேடவும்