பறவை காய்ச்சல் பீதி - ஒரே நாளில் 12,500 வாத்துக்கள் தீ வைத்து எரிப்பு

பறவை காய்ச்சல் பீதி - ஒரே நாளில் 12,500 வாத்துக்கள் தீ வைத்து எரிப்பு

பறவை காய்ச்சல் பீதி - ஒரே நாளில் 12,500 வாத்துக்கள் தீ வைத்து எரிப்பு

கேரளாவில் இன்னும் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது. இதற்கிடையே ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய 2 மாவட்டங்களில் வாத்து பண்ணைகள் அதிகமாக உள்ளன.

இங்கு இருந்து தான் கேரளாவின் அனைத்து பகுதிகளுக்கும், அருகில் உள்ள குமரி மாவட்டத்திற்கும் வாத்துகள், முட்டைகள் தினசரி விற்பனைக்காக அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நாட்களில் தான் வாத்து விற்பனை அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஆலப்புழா மாவட்டம் தகழியில் உள்ள சில வாத்து பண்ணைகளில் கடந்த சில நாட்களாக வாத்துக்கள் திடீர் திடீரென செத்து விழுந்தன. 

இது குறித்து கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று இறந்த வாத்துகளின் ரத்த மாதிரிகளை எடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த பரிசோதனை முடிவில் வாத்துகள் செத்ததற்கு காய்ச்சல் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தகழி பகுதியில் உள்ள வாத்துக்களை கொல்ல முடிவு செய்யப்பட்டது. அதன் படி நேற்று முன் தினம் ஒரே நாளில் 12,500 வாத்துக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

 

ஆலப்புழா பகுதியில் இருந்து கோழி, வாத்து, காடை மற்றும் வளர்ப்பு பறவைகளை இறைச்சிக்காகவோ,  வளர்ப்பதற்காகவே யாரும் கொண்டு செல்ல கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளன.

Find Us Hereஇங்கே தேடவும்