மாரிதாஸ் ஐ விடுதலை செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன் அறிக்கை

மாரிதாஸ் ஐ விடுதலை செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன் அறிக்கை

மாரிதாஸ் ஐ விடுதலை செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன் அறிக்கை

மாரிதாஸ் கைதுக்கு வானதி சீனிவாசன் அறிக்கையின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் காஷ்மீர் போல பிரிவினைவாதிகளின் கைகளில் சிக்கி விடக் கூடாது என்ற ஆதங்கத்தில் ட்விட்டரில் பதிவிட்ட அரசியல் விமர்சகர் மாரிதாஸ் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இது கண்டனத்திற்குரியது. 

திமுக வின் கொள்கையும் திமுக அரசின் செயல்பாடுகளையும் மிக கடுமையாக விமர்சித்து வருபவர் மாரிதாஸ். இந்தப் பின்னணியில் தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

கருத்து சுதந்திரம் பற்றி அதிகமாகப் பேசும் கட்சி திமுக. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு தங்களை ஆதிரிப்பவர்கள் மட்டுமே கருத்துச் சுதந்திரம் உண்டு என்ற வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

தங்களை எதிர்க்கும் குரலை ஒடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும், மாரிதாஸ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்