வன்முறையை தமிழக அரசு அனுமதிக்காது – சேகர் பாபு பேச்சு!

வன்முறையை தமிழக அரசு அனுமதிக்காது – சேகர் பாபு பேச்சு!

வன்முறையை

தமிழக அரசு அனுமதிக்காது – சேகர் பாபு பேச்சு!

 

ராஜாஜியின் 143வது பிறந்த நாளையொட்டி சென்னை உயர்நீதிமன்ற

வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கபட்ட புகைப்படத்திற்கு அமைச்சர்கள்

மு.பெ.சாமிநாதன், சேகர் பாபு உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை

செலுத்தினர்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை

அமைச்சர் சேகர் பாபு பேசுகையில்,

 

தமிழகம் ஒற்றுமையான மாநிலமாக திகழ்கிறது. ஒரு சிலர் அவர்களது

கருத்துக்களை, கொள்கைகளை பரப்புவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், விஷமத்தை ஏற்படுத்தும்

வகையில் வன்முறை விதை தூவலை ஒரு போதும் தமிழக அரசு அனுமதிக்காது.

 

இதுவரை இந்து சமய அறநிலையத்துறை மூலம் 487 ஆக்கிரமிப்பாளர்கள்

மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 1,587 கோடி பெறுமானம் உள்ள சொத்துக்கள்

மீட்கபட்டுள்ளது. இணையம் மூலம் வாடகை வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த

மாதம் மட்டும் 20 கோடி ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது என்றார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்