நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது!

நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது!

நடிகையின்

புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது!

 

சீரியல்

நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி

மாணவர் கைது!

தனியார் தொலைக்காட்சி சீரியலில்

நடித்து வருபவர் நடிகை பிரவீணா. இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

பல படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவரின் புகைப்படங்களை

சிலர் சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு வந்தனர். இது குறித்து அவர்

சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.

 இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்

குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தத் தேடுதல் வேட்டையில் முதற்கட்டமாக

கன்னியாக்குமரியைச் சேர்ந்த மணிகண்டன்  சங்கர்

என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய

டில்லி நாக்பூரைச் சேர்ந்த பாக்கியராஜ் என்ற கல்லூரி மாணவரையும் போலீசார் நேற்று கைது

செய்தனர்.

 

 குற்றம் சாட்டப்பட்டவர்களை திருவனந்தபுரத்திற்கு

கொண்டு வரப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்