வணிக பயன்பாட்டிற்கான காஸ் விலை உயர்வு!

வணிக பயன்பாட்டிற்கான காஸ் விலை உயர்வு!

வணிக பயன்பாட்டிற்கான காஸ் விலை உயர்வு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. 

இதில், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. காஸ் சிலிண்டர் விலை மாதம் 2 முறை மாற்றப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதில், நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாத விலையிலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது.

ஆனால், 19கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை 101.50 ரூபாய் உயர்ந்து 2,234.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவுப் பொருளின் விலையும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்