ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே தவிர மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

’ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே’ - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

’ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே’ - அமெரிக்க அதிபர்
ஜோ பைடன்..!

 ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே தவிர மக்கள் பீதியடைய வேண்டாம்
என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில்
உள்ளது.  இந்த வகை கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும்
வேகமாக கால் பதித்து வருகிறது. ஒமிக்ரான் பரவலால் தென் ஆப்பிரிக்காவில் வேகமாக கொரோனா
தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

 இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே என்று அமெரிக்க
அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக நேற்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த
ஜோ பைடன், ”ஒமிக்ரான் வைரஸ் பரவல் கவலைக்குரியது தான். ஆனால இது குறித்து மக்கள் பீதியடைய
வேண்டாம். முழு முடக்கம், ஊரடங்கு போன்றவை இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்தல்,
பூஸ்டர் டோஸ், பரிசோதனை உள்ளிட்டவற்றவை அதிகரிப்பதன் மூலம் இந்த வைரசுக்கு எதிராக போராட
உள்ளோம் என்பது குறித்து நான் விரிவான திட்டங்களை முன்வைக்கிறேன்” என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்