ஏமி ஜாக்சன் தனது காதலரை விட்டுப் பிரிந்தாரா?

ஏமி ஜாக்சன் தனது காதலரை விட்டுப் பிரிந்தாரா?
தனது காதலரை விட்டு ஏமி ஜாக்சன் பிரிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'மதராசபட்டினம்' திரைப்படதின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஏமி ஜாக்சன். 'ஐ', 'தெறி', '2.0' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் காதலர் ஜார்ஜ் பனாயிடூ என்ற தொழிலதிபருடன் வாழ்ந்து வந்தார்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் காதலருடன் இருப்பது, கர்ப்பமாக இருப்பது உள்ளிட்ட புகைப்படங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார் ஏமி ஜாக்சன்.

2019ஆம் ஆண்டு ஏமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து ஜார்ஜ் பனாயிடூ - ஏமி ஜாக்சன் இருவரும் இத்தாலியில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். 

ஆனால், கொரோனா காரணமாகத் திருமணம் தள்ளி போனது. இந்நிலையில் தனது காதலர் ஜார்ஜ் பனாயிடூ சம்பந்தப்பட்ட அனைத்துப் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார் ஏமி ஜாக்சன்.

இதற்க்கு ஏமி ஜாக்சன் தனது காதலரை விட்டுப் பிரிந்தது தான் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஏமி இது தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை வெளியிடவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்